வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம்
மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழுப்புரம்
மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் காமராஜ்
நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 28-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை
10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழகத்தைச்
சார்ந்த 100-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து
கொண்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பொறியியல் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித் தகுதி பெற்றவர்களும் பணிவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.
முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது கல்விச்சான்றின் நகல், சுய விவரக் குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும், திறன் பயிற்சி பெறுவதற்கான பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும், விவரங்களுக்கு 04146-226417 என்ற விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment